மதராஸின் முதல் என்கவுண்ட்டர்
கி.பி 1642
ஆகஸ்ட் மாதம் ஒரு நாள்,
அன்று காலையிலேயே நன்றாக சரக்கு அடித்து விட்டு, சாந்தோம் போர்த்துகீஸ் வீரர்கள் மூவர் வேண்டுமென்றே TOM AND JERRY ரகளை செய்ய ஜார்ஜ் கோட்டை அருகில் வருகின்றனர்.
இவர்களைப் பார்த்ததுமே ஆங்கிலேயர்களுக்குக் கடுப்பு, வியாபார, மத எதிரிகள் அல்லவா?
போட்ட சரக்கு புத்தியை மயக்க, போர்த்துகீஸியர் வாய்வார்த்தை விட, பதிலுக்கு இவர்களும் வாய் பேச, கைகலப்பில் முடிய...அடே ஆண்டனி மிராண்டோ என்ற போர்த்துகீஸிய வீரன் ஓர் ஆங்கில வீரனை ஒரே போடு கத்தியால் போட்டுத் தலைக் கடற்கரையில் வீசினான்.
இவன் சும்மா விடுவானா?
மூவரையும் கைது செய்ய, விஷயம் வியாபாரிகள் மூலம் சாந்தோமுக்குப் பரவ - sorry no cellphone, watsup.
சீனியரான போர்த்துகீஸியருக்கு பயந்த ஆண்ட்ரூ கோகன் இருவரை விடுதலை செய்து போக விட்டார்.அதற்குள் போர்த்துகீஸியர்கள் தங்களைத் தாக்கலாம் என்றுணர்ந்து நாயக்க மன்னனின் 500 வீரர்களைக் கோட்டைக்கு வெளியே பாதுகாப்பிற்கு நிற்க வைத்த ஆண்ட்ரூ கோகன், விசாரணை ஏதுமின்றி ஜார்ஜ் கோட்டை [மதராஸுக்குள்] ஆண்டனி மிராண்டோவை சுட்டு உடலைக் கூவம் தாண்டி வீசிவிட்டு வந்தார்.
மதராஸின் முதல் என்கவுண்ட்டர் இதுவே!