திருச்சியில் தஞ்சை...

மலைக்கோட்டை மாநகர் - திருச்சிராப்பள்ளி - திருச்சி.

இது தமிழகத்தின் மைய நகரம், மூன்றாம் பெரிய மாநகரம்.

ஊரின் ப்ரதான வரலாற்றுச் சின்னம் மலைக்கோட்டை.

இதன் கீழ் மாணிக்க விநாயகர் உள்ளார்.

அடுத்து நடுவில் கி.பி 6ஆம் நூற்றாண்டில் எழுப்பப் பட்ட தாயுமானவர் ஸ்வாமி சிவன் கோயில் உள்ளது.அதை அடுத்து மேலே ஏறும் போது குடைவரைக் கோயில் உள்ளது.அதை அடுத்து உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளது.

கி.பி 5ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு சோழ தேசத்தைப் போரிட்டுக் கைப்பற்றினான்.

அவன் மகன் தான் குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த மகேந்திர வர்ம பல்லவன்.அவன் காலம் கி.பி 6.அவன் காலத்தில் தான் அப்பரும் சம்பந்தரும் சைவ மதத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர்.சமண மதத்தில் இருந்த மகேந்திரன் சைவ மதத்துக்கு மாறினான்.

அப்போது மலைக்கோட்டையில் ’லலிதாங்குர பல்லவ ஈஸ்வர க்ருஹம்” என்ற அழகிய குகைக் கோயிலைச் சிவனுக்கு உண்டாகினான்.இன்றும் அதைக் காண்க.

ஆனால் அதற்கு முன் அவன் அப்பா சிம்ம விஷ்ணு சமண மதத்தை ஆதரித்த போது அம்மலையில் வாழ்ந்த ’சிரா” என்ற ஒரு உயர்ந்த சமண முனிவருக்கு குரு தட்சிணையாக சமண குகைப் படுக்கைகளை அமைத்தான்.அவன் காலத்துக் கல்வெட்டுகள் அங்கு உள்ளன. சிரா முனிவர் தங்கிய பகுதி சிராப்பள்ளி ஆயிற்று.உச்சிப்பிள்ளையார் போயில் அமைந்த பெரிய பாறையின் ஒருபுறம் உள் ஒடுங்கு இப்பள்ளி உள்ளது.

மகேந்திரன் சமணர்கள் வாழ்ந்த அப்பள்ளியை மாற்றி அருகில் சிவனுக்குக் குடைவரைக் கோயில் அமைத்தான்.

”கங்கையைத் தலையில் சூடிய ஈசன், இவ்வழகிய கோயிலில் இருந்து பார்த்தாள் அழகிய காவிரி தெரிவாள்.அவளையும் தலையில் சூடிக்கொள்ளத் தான் மகேந்திர பல்லவன் இக்கோயிலை உருவாக்கினானோ?” என்று பார்வதி கூறுவது போல் சிவன் கோயில் குகையில் கல்வெட்டு உள்ளது.

அதையே சம்பந்தரும் அப்பரும் பாடினர்.இன்றுள்ள தாயுமானவ ஸ்வாமி பிற்காலத்தில் உண்டான கோயில் தான்.

இந்த சமணப்பள்ளி குகையில் ”தஞ்சஹ ரக” என்ற சொல் உள்ளது.

அதாவது ”தஞ்சையை வென்றவன்” என்று அர்த்தம்.

அது சிம்ம விஷ்ணுவையே குறிக்கும்.

எனவே கி.பி 5ஆம் நூற்றாண்டில் தஞ்சை பல்லவரின் ஆட்சியின் கீழ் வந்துள்ளது.