தமிழகத்தில் ப்ரதான மாரி அம்மனாய் உள்ள சமயபுரம் மகமாயி கி.பி 14ஆம் நூற்றாண்டு வாக்கில் நாயக்க மன்னர்களால் ஸ்தாபனம் செய்யப்பட்டவள். அவ்வூரின் பெயர் கண்ணனூர்.அவ்வூரின் ஆதி தேவதை மாகாளிக்குடி [மாகாளிக்குடி என்று கேட்டுச் செல்க] மஹாகாளி.விக்ரமாதித்யன் உஜ்ஜனியில் பூஜித்த காளியின் சக்தியை சோழர்கள் த்யானித்து உருவாக்கிய கோயில் அது.அதில் தேவி மிக மிகத் தொன்மையான கற்சிலை வடிவில் உள்ளாள்.அக்கோயிலில் மிகச் சிறிய ஆனால் மிக நுட்பமான 18 கைகள் கொண்ட மஹாகாளியின் செப்புத் திருமேனி உள்ளதைக் காண்க.மனிதனுள் உள்ள த்யாக உணர்வை ”சின்ன மஸ்தா” என்ற சக்தி வடிவாய் தச மஹா வித்யா சக்தி உபாசனை போற்றும்.அத்தேவியின் சக்தியாய் மாகாளி இருக்கிறாள்.
சமயபுரம் - சரியான சமயம் பார்த்து அருளும் அம்மை.சரியான சமயத்துக்கு ஆன்மீக அன்பர்கள் பொறுமை காக்க வேண்டும்.அம்மை 448 அரிய மூலிகைக் கலவையால் செய்யப்பட்டவள், எனவே மூலஸ்தானத்தில் தேவிக்கு அபிஷேகம் இல்லை.அவள் காதுகளில் சிவ யந்த்ர தோடுகளைக் காஞ்சி மஹா ஸ்வாமிகள் ப்ரதிஷ்ட்டை செய்தார்.சகல உடல் பிணிகளை ஒழிக்கும் ஆதி ஒளஷத சக்தியாய் அம்மை வீற்று இருக்கிறாள்.”சர்வ வ்யாதி ப்ரசமனி” என்று லலித சஹஸ்ரநாமம் போற்றுவது இவளையே.
எட்டு திருக்கைகளுடன் சும்ப நிசும்பர்களின் தலைகள் மீது பாதம் பதித்த கோலத்தில் அம்மை உள்ளாள்.
”சிந்தூராரண விக்ரஹா” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும் வண்ணம் மாதுளம் பூ நிறத்தாளை இங்கு காண்க.
இரண்டு உத்சவர்கள் உண்டு.அம்மைக்கு அருகில் உள்ள அறையில் உள்ள மூர்த்திக்கு வடிவமைப்பிலேயே ஆயிரம் கண்கள் [வார்ப்புப் புள்ளிகள்] உண்டு.இவளையே ”ரஹஸ்ராக்ஷி - ஆயிரம் கண்ணுடையாள்] என்று லலிதா சஹஸ்ரநாமம் போற்றும்.
அம்மையின் பரிவார மூர்த்தியாகக் கருப்பண்ண ஸ்வாமி உள்ளார்.தேவிக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதும், அங்கப்ரதர்சனம் செய்வதும் மிக ப்ரஸித்தம்.
தக்க சமயத்தில் அம்மை அருள வேண்டுமாயின், நாம் உரிய நல் வினைகள் செய்திருத்தல் வேண்டும்.
யோசியுங்கள்.....