We are all cells in one Cosmic Body

  • Skip to content
  • Jump to main navigation and login

Nav view search

Navigation

  • Home
  • Donate
  • Store
  • Media
  • News
  • Testimonials
  • Contact
  • Disclaimer
  • Discussion
  • Blog

Search

Logo
  1. You are here:  
  2. Home
  3. Awareness

Important Sections

  • Selftual
  • Health & Cure
  • Uni5 Clinic
  • Pregnancy Care
  • Uni5 Pattern Connecting Education
  • Support Yourself

Uni5 Community Blog

There is only one Truth and a single path to Truth, only views are different. Mission of Sakthi Foundation is to unify everyone by helping to understand that their views are only different levels of expressions of one single concept (Energy). This unification or unity in diversity is Peace or love or happiness, which is established only by embracing our view with others view and contemplate why the views differ. Please discuss all topics in this blog with the above intention. We can discuss here Atheism, all Religions, Spirituality, Science in connection to body, mind, intelligence, Awareness and Consciousness. To achieve this we are giving you a template where you can identify your views and others view. This will guaranteed Unity, peace, love and happiness. With this Universal template, all difference of opinion between religions, science will melt away like heat melting all different ice cubes to pure water. Five templates that will unify all our thoughts. Check if our view is based on the knowledge we got from our 1. physical senses 2. Our personal strong likes and dislikes' 3. A logical pattern 4. connection to our Self 5. That is universal to all at times. We will find that every view of us is at one of the five levels. The higher level is that which stays for longer and universal. This view will bring peace and happiness in our lives.

Uni5 Self Awareness

Rameshwaram Agni theertham

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 2623
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்
 
தீர்த்தம்
தண்ணீர் இறையுணர்வுடன் பயன்படுத்தும் போது தீர்த்தம் ஆகிறது.
கங்கை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, குமரி ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் பாரத தேசத்து மக்களுக்குக் காலம் காலமாக மிக முக்கியமான ஆன்மீக விஷயமாகும்.
 
உடலின் அழுக்கைத் தண்ணீர் கழுவுவது போல் மனதின் அழுக்கை ஆன்மீக ஞானத்தால் அறத்தால் கழுவ வேண்டும் என்று தீர்த்தம் உணர்த்தும்.
 
தண்ணீர் மிக அதிகமாக சக்தியை உடையது.
அது மனதின் குறியீடு.
மனம் நல்ல வழியில் செல்ல ஆன்மீகத்தில் தீர்த்தம் பயன்படுத்தப்படும் ஒரு வெளிப்புறச் சாதனம் ஆகும்.
 
ராமேஸ்வரத்தில் மிக முக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தமான கடல் தான்.
 
அக்னியும் தண்ணீரும் சேர்ந்த நிலை.
 
அக்னி மாற்றத்தை உண்டாக்கும் சக்தி கொண்டது.
 
சீதை மீண்டும் பொருளாசையினால் மனம் போன போக்கில் தான் இருக்கக்கூடாது என்று அக்னியான ஞானத்தால், தீர்த்தத்தால் தன்னை மாற்றிக் கொண்ட தீர்த்தம் இதுவாகும்.
 
இலங்கைப் போருக்குப் பின் ராமனும் சீதையும் யாவரும் இக்கடலில் நீராடி, மணலில் சிவலிங்கம் செய்து அடுத்த கட்ட வாழ்வை ஆரம்பிக்க விழிப்புணர்வு கொண்ட இடம் அக்னி தீர்த்தம்.
 
ஸ்ரீராமன் சீதையின் உடல் ஸ்பரிசம் பட்ட கடல் தான் இது.
 
எந்தச் செயலால் நாம் மிகவும் துன்பம் கொண்டோமோ அதை மீண்டும் செய்யவே கூடாது என்ற எச்சரிக்கையுடன் கூடிய விழிப்புணர்வைப் பெற சிவபரம் பொருளை, ஸ்ரீராமனை எண்ணித் தீர்த்தம் ஆடுக.
 
அதே போல் தான் கோயிலுள், தீவுனுள் உள்ள பலர்பல தீர்த்தங்களும்.அதைக் கொண்டு உயர் மனப் பரிமாற்றம் கொள்க.
 
தீர்த்தாடனம் என்பது அத்தகைய உயர் மனப் பரிமாணத்துக்கே!
 
img id=":0_32" name=":0" src="https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/no_photo.png" jid="This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it." data-hovercard-id="This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it." class="ajn bofPge" style="display: block; width: 32px; height: 32px; border-radius: 50%;">
ReplyReply allForward

Devipattinam where SriRam performed Navagraha poojas

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 2265
தேவிபட்டிணம் 
 
ஸ்ரீராமன் தன் சேனையுடன் அகஸ்தியர் முன்னிலையில் நவக்ரஹ பூஜிஅ செய்த இடம் தான் நவபாஷாணம் என்று கூறப்படும் தேவிபட்டிணம்.
 
தேவி மகிடாசுரனை அழிக்கப் போராடிய ஊர்.
 
இங்குள்ள துர்கையின் அருள் வேண்டி வஸந்த கால நவராத்ரியை ஸ்ரீராமன் அனுஷ்டித்தான்.
 
கடலை அடைத்த பெருமாள் என்ற பெயருடன் ஸ்ரீராமன் இருக்கிறார்.
 
கடலுள் ஒன்பது நீண்ட நெடும் கற்கள் நவக்ரஹங்களாக ஆவாஹிக்கப்பட்டு பூஜையில் உள்ளன.
 
சிறு பாலம் மூலம் சென்று, நீரினுள் இறங்கி அவற்ரைத் தொட்டு வழிபட முடியும்.
 
நாக தோஷ, ராகு கேது தோஷப் பரிகார ஸ்தலங்களில் ஒன்று.
 
பாண்டியர் காலத்தில் சிறு துறைமுகப்பட்டிணமாகவும் இவ்வூர் விளங்கிற்று.
 
நவக்ரஹ பூஜை செய்து ராமன் தன் பாக்ய சக்தியை அதிகரித்துக் கொள்கிறான்.
 
அப்போது அகஸ்தியர் சூரியனை வழிபடும் தலைசிறந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்துதியை ராமனுக்கு உபதேசித்தார்.
 
இலங்கையில் முதல் நாள் போரில் ராமன் சற்று மனம் தளர்ந்த போது, லக்ஷ்மணன் அதை நினைவு கூறி, ராமன் ஆதித்ய ஹ்ருதயம் கூறி சூரியனின் சக்தியைப் பெற்றான்.
 
மக்கள் இதை மிகவும் அசுத்தம் செய்வது கண்டிக்கத் தக்கது.
 
நவக்ரஹ பூஜையில் ராமன் எத்தனை கலக்கத்துடன் இலங்கை நோக்கி அமர்ந்திருப்பான் என்று எண்ணிப் பார்க்க நாம் காலம் கடந்து சென்று விடுகிறோம்.
 
சம்பந்தரின் கோளறு பதிகம், ஆதித்ய ஹ்ருதயம், நவக்ரஹ ஸ்துதிகள், அஷ்டோத்ரங்கள் மனதாரக் கூறி கடலையும் ராமனையும் இலங்கையையும் இணைத்து நம் வாழ்வின் லட்சியங்கள் நிறைவேற நவக்ரஹ சக்திகளைக் கூட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வைப் பெறும் ஸ்தலம் இதுவாகும்.
 
நவக்ரஹங்கள் என்பன நம்முள் உள்ள ஒன்பது மனித குணங்களே.

Rameshwaram guidelines in Telugu

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 2124
అగ్నితీర్థం - సముద్రం, ఇక్కడరాముడునివసించిన, సీతమ్మనుతీసుకువచ్చినలంక18 కిలోమీటర్లదూరంలోఉంది. రాముడుసీతమ్మతోకలిసిఇక్కడఇసుకలింగమునుస్థాపించిపూజలుచేశారు. రామనాధస్వామి- గర్భగుడిలోనిప్రధానలింగము. సీతమ్మతనభౌతికఅహమునుండిరూపాంతరముచెందారు.

ఆదిశంకరమఠం - 1977 లోకాంచీపురంశంకరమఠంద్వారాస్థాపించబడినది. ఇక్కడ  గురువునుతన 4 శిష్యులతోచూడవచ్చును.

ఉజ్జయినిభద్రకాళి - ద్వీపంయొక్కప్రధానరక్షకదేవత.

ప్రధానఆలయం :

ప్రవేశద్వారంవద్దకుడివైపున16 అడుగులహనుమంతుడినిచూడవచ్చు. అతనుతీసుకువచ్చినశివలింగంవెనుకమూలలోపెట్టారు.  శివలింగమునుపట్టుకున్నహనుమంతుడిపురాతనవిగ్రహమునుకూడాచూడండి. ఈవిగ్రహముయొక్క8 అడుగులుభూమిక్రిందఉన్నది.

నంది - పవిత్రమైనఎద్దువిగ్రహం. దేశంలోనిఅతిపెద్దనందివిగ్రహాలలోఒకటి.

రామనాధలింగంసీతచేతస్థాపించబడినది - భారతదేశంలోకాశితరువాతరెండవజ్యోతిరలింగము.

కాశివిశ్వనాథగారుమరియుదేవివిశాలాక్షి.

దేవిపర్వతవర్దినిమందిరంమరియుసేతుమాధవమందిరం (విష్ణు - భారతదేశంయొక్కమూడుప్రధానవిష్ణువులలోఒకటి)

వరండా - ప్రపంచంలోఅతిపెద్దవరండా

రామపాద (రాముడియొక్కపాదములు) - స్కంధమాధనపర్వతము. లంకచేరుకోవడానికిరాముడుమరియులక్ష్మణుడునిలబడివైమానికవీక్షణచేసినపర్వతము. ఈపర్వతమునుండేహనుమంతుడుసీతనుచూడటానికిలంకకు  వెళ్ళాడు.

సాక్షిహనుమంతుడు - లంకఅన్వేషణతరువాతహనుమంతుడురాముడినికలిసిసీతయొక్కతలఆభరణముఇచ్చి  "సీతసజీవంగాఉన్నది" అనిచెప్పినస్థలం.

1964 తుఫాన్తరువాతధనుష్కోటిద్వీపంనుండితీసుకొనివచ్చిన  హనుమంతుడిదగ్గరదోగాడుతున్నకృష్ణుడివిగ్రహంచూడండి.

Navarathry special article 2018

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 2172
நவராத்ரி சிறப்புக் கட்டுரை
 
பரம்பொருள் பராசக்தியாக மாறுகிறது
பராசக்தி ஐம்பூதங்களாக மாறுகிறது
ஐம்பூதங்களின் கூட்டுச் சேர்க்கையால் ப்ரபஞ்சம் - பரந்த பஞ்ச பூத வெளி உருவானது
அதில் சூரியக் குடும்பத்தில் பூமியின்கண் உயிர்கள் தோன்றின.
அவற்றுள் மனிதன் உயர் பரிணாமத்தில் இருக்கிறான்.
மனிதனின் அன்றாடத் தேவைகள் ஏராளம்.
ஆனால் பிற உயிர்களுக்கு உணவும், உறைவிடமும், இனப்பெருக்க்மட்டுமே தேவை
அதனால் அவை நேரடியாகவே இயற்கை சக்தியில் இருந்து வாழ்வாதார சக்தியை க்ரஹித்துக் கொள்ள முடியும்.
மிக அதிகம் தேவையுள்ள மனிதனுக்கு அது இயல்வதில்லை.
அதனால் ப்ரபஞ்ச பராசக்தியை அவன் தன் பாக்ய சக்தியாக்கிட முனைந்தான்.
அதைப் பெண்மையாக உருவகித்தான், மதித்தான், உண்மை உணர்ந்தான், பல்வேறு சடங்குகள் மூலம் சக்தியை க்ரஹித்துப் பயன்படுத்தினான்.அவை தான் சமயச் சடங்குகள்.
 
குமரிக் கண்டத்தின் தோன்றிய ஆதி மனிதன் ப்ரபஞ்ச சக்தியான பெண்மை வணங்கி மதித்து நன்றி கூறும் தருணம் தான் நவராத்ரி விழா.
 
உலகில் நீண்ட விழா, பத்து இரவுகள் கொண்டாடப் படும் விழா.
 
அலைப்பேசியை ரீ சார்ஜ் செய்து கொள்வது போல் ஆண்டுக்கு ஒரு முறை நம் வாழ்வாதார சக்தியை ரீ சார்ஜ் செய்யும் பத்து இரவுகள் மிக உன்னதம் ஆனவை.
 
தச ராத் - பத்து இரவுகள்
நவராத்ரி - ஒன்பது இரவுகள்
இரவில் தான் மனிதன் மிக்க கவனத்துடன் இருப்பான்.
வாழ்க்கையே அறியாமை என்ற இருள் சூழ்வதால், அதில் ஞானம் என்ற விளக்கின் வெளிச்சம் கொண்டு வாழ நவராத்ரிகள் உதவுகின்றன.
______________________________________
ப்ரபஞ்ச சக்தியைப் பெண்மை என உணர்ந்த மனிதன் அதன் மூன்று மிக முக்கியமான இயக்கங்களை உணர்கிறான்.
 
தோற்றுவித்தல்
பாதுகாத்தல்
மாற்றுதல்
 
ப்ரபஞ்சத்தில் சதா எக்காலமும் இம்மூன்று செயல்களும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
 
இம்மூன்று செயல்களையும் செய்யும் ப்ரபஞ்ச சக்தியை மனிதன் மஹாசரஸ்வதி, மஹாலக்ஷ்மி, துர்கை என்று உருவகம் செய்தான்.
 
அனைத்தும் ஒருங்கிணைந்த சக்தியே மஹாகாளி.
 
உலகம் முழுவதும் மிகத் தொன்மை மிக்க மனித நாகரிகங்கள் பெண் தெய்வ வழிபாட்டைக் கைக்கொண்டன.
 
அவற்றுள் பாரத தேசத்தில் காலம் காலமாகப் பெண் தெய்வ வழிபாடே மேலோங்கி இருக்கிறது.
 
நவராத்ரியின் ஒன்பது நாட்களில் மேற்கண்ட மூன்று சக்திகளையும் பிரித்து வணங்குகிறோம்.இறுதி ராத்ரியில் [பத்தாம் நாள்] மஹாகாளியை வணங்குகிறோம்.
____________________________________________
மனிதனின் மனதுள் உள்ள பல்வேறு தீய எண்ணங்களை அசுர சக்திகள் என்று புராணங்கள் அனிமேட் செய்யும்.
 
பேராசை, பொறாமை, அகம்பாவம், கருமித் தனம், சோம்பல், புறம் கூறுதல், கோபம் ஆகிய மிகத் தீய சக்திகள். இவை செயல் வடிவம் பெறுகையில் வாழ்வாதார சக்தி குறைந்து விடும்.இத்தீய சக்திகள் மனதுள் எழும் போது தூய அறிவால் அதை எதிர்த்து வெளியேற்றுவதையே அன்னை பராசக்தி பல்வேறு அசுரர்களுடன் போராடுவதாக முன்னோர் உருவகம் செய்வர்.
 
ஒவ்வொரு நாளும் பூஜையில் மனதுள் இவை வரின், அவற்றை அழிக்கும் ஞான சக்தி வேண்டும் என்று வேண்டுக.
____________________________________________
கொலு
நவராத்ரியை பாரத தேசம் முழுவதும் பல்வேறு முறைகளில் கொண்டாடுகிறோம்.
யாரும் கொண்டாடலாம், எவரும் கொண்டாடலாம், மனம் தான் வேண்டும்.
 
தமிழகத்தில் கொலு என்ற அமைப்பு முறையில் நவராத்ரி கொண்டாடப்படுகிறது.
 
அரசன் அவையில் வீற்றிருக்கும் காட்சியே கொலு.
ஆதிபராசக்தி நம் வீட்டில் நம் மனதில் கொலு இருக்க வேண்டும்.
பொம்மைகள் என்பன ப்ரபஞ்ச சக்தியின் அனைத்துத் தோற்ற வடிவங்களையும் சுட்டும்.
இதன் மூலம் அனைத்துள்ளும் எவருள்ளும் எதுவுள்ளும் ஆதிசக்தியே ஆதார சக்தியாகிறது என்ற அறிவியல் கோட்பாட்டை உணர்க.
 
அனைவரையும் அன்புடன் மதித்திடுக, உதவுக.
_______________________________________________
முதல் மூன்று நாட்கள் - துர்கை 
சிவப்பு நிறம் கொண்ட பூக்கள், வேப்பிலை, குங்குமம், ஆடை கொண்டு அலங்கார பூஜைகள்
 
அடுத்த மூன்று நாட்கள் - மஹாலக்ஷ்மி
பொன் நிற மலர்கள், செந்தாமரை, வில்வம் [பொன் தாது கொண்டது], மஞ்சள் கொண்டு பூஜைகள் செய்க.
 
சப்தமி - அமாவாசையின் ஏழாம் நாளி கல்வி கேள்வி கலைகள் ஞானத்தின் சக்தியான மஹாசரஸ்வதியை த்யானம் செய்ய வேண்டும்.அன்று முதல் மூன்று நாட்கள் சரஸ்வதி.மூன்றாம் நாளான நவமி [ஒன்பதாம் நாள்] மஹாநவமி ஆகும்.அன்று சரஸ்வதி பூஜை.
வெண்மை வண்ண மலர்கள், வெண்தாமரை, சந்தனம், வெண்பட்டு கொண்டு அலங்கார பூஜைகள் செய்க.
 
மூல நட்சத்திரம் வரும் நேரம் பார்த்துப் புத்தகங்கள், கலைப் பொருள்கள், கருவிகள் ஆகியவற்றை ரீ ஜார்ஜ் செய்ய பூஜையில் வைத்திடுக.சரஸ்வதி பூஜை அன்று பூஜித்து பத்தாம் நாள் விஜய தசமி அன்று எடுத்து மீண்டும் உபயோகம் செய்க.
 
எட்டாம் நாள் மஹா அஷ்டமி.அன்றே அன்னை துர்கை மகிஷாசுரனை [முழுமொத்த ஆணவத்தின் குறியீடு] அழிக்கிறாள்.இவளே கொற்றவை.இவளையே அதிகம் மக்கள் வணங்குகிறார்கள்.
 
விஜய தசமி அன்று நெல் அல்லது பச்சரிசி பரப்பி அனைவரும் மீண்டும் எழுதலாம்.உங்கள் தொழில் சார்ந்த ஒரு காரியத்தைத் திட்டம் இடுக.உங்கள் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், கலைத்துறை குருக்கள், ஆன்மீக குருக்கள் ஆகியோருக்கு மரியாதை செய்க.
 
அன்று இரவு மஹாகாளியை த்யானித்து இரவில் கொலுவிற்கு ஆரத்தி காட்டி த்ருஷ்டி கழித்து முடித்துக் கொள்க.
 
பத்து நாட்கள் கொலு முடியாவிடின் 9, 7, 5, 3, 1நாள் கொலு வைப்பதும் ஏற்பு உடைத்தே.
 
எச்சாதியினரும் இதைச் செய்ய உரிமை உண்டு, செய்கிறார்கள் உலகம் முழுவதும்.ஏன் வேற்று மாநிலத்தவர் கூடச் செய்வர்.
 
பத்து நாட்களும் கலசத்தில் அன்னையை த்யானித்து அவளை அர்ச்சித்தாலும் பலனே.
 
ஒரே ஒரு பொம்மைக்கு அலங்காரம் செய்வோரும் உண்டு.
 
பிள்ளையார், கலசம், துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி மட்டும் வைப்போரும் உண்டு.
 
கலைத் திறனைக் காட்டுக, குழந்தைகளின் திறன்களை வெளிக்கொணர்க.
 
இவ்வாண்டு நவராத்ரி அக்டோபர் 10 அன்று ஆரம்பம்.
ஆனால் மாஹாளய அமாவசை 8 அன்று வர, அன்றே நல்ல நேரம் பார்த்துக் கலசம் வைத்து, கொலு அமைத்துக் கொள்க.
 
ப்ரபஞ்ச சக்தியான பெண்மையை வணங்கி உங்கள் வாழ்வாதார சக்தியைப் பெருக்கிக் கொண்டு வளம் பெறுக, சமூஹ நலன் பேணுக.

ஆதிமனிதனின் கருவிகளும் சிற்பக்கலையும்

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 2180
ஆதிமனிதனின் கருவிகளும் சிற்பக்கலையும்
 
நமது சிற்ப சாஸ்த்ரத்தில் கூறப்படும் அனைத்து தெய்வங்களின் பல கைகள் மனிதன் பல வகை நல்வினைகள் செய்வதையே சுட்டு.
 
இவற்றை ”திவ்ய ஆயுதங்கள்” என்றே சிற்ப நூல்கள் கூறும்.
 
ஆயுதம் என்றால் போர்க்கருவி மற்றும் தொழில் கருவி என்ற இருவேறு அர்த்தங்கள் உண்டு.
 
ஆதிகால மனிதன் தன்னை, தன் கூட்டத்தைக் காக்கக் கருவிகள் உருவாக்கினான்.
 
தன் தேவைகளுக்குத் தொழில்கள் செய்யும் கருவிகள் உருவாக்கினான்.
 
இவற்றை எல்லாம் அவன் தான் இயற்கையின் சக்தியாய் உணரும் தெய்வத்தின் கைகளில் தந்தான்.
 
ப்ரபஞ்ச சக்தியின் உறுதுணையால் தான் தன் காப்பும், தன் தொழிலும், வாழ்வும் நிகழ்கிறது என்று உணர்ந்தான்.
 
உலகில் மிகத் தொன்மை மிக ஆயுதக் கருவி வேல்.
 
அடுத்து கத்தி.
 
அடுத்து வில் அம்பு.
 
குமரிக் கண்ட ஆதி மனிதனே இவற்றைக் கண்டு பிடித்தான்.
 
அதனால் தான் தமிழச் சிற்பங்கள் பல வேல், கத்தி, வில் அம்பு கொண்டு விளங்குவதைக் காண்க.
 
ஆயுதங்களையே மனித முதலில் வணங்கினான்.அதையே ஆயுத பூஜை என்றான்.தொழிலை மதிக்கும் சமூஹமே நம் தமிழ்ச் சமூஹம்.
 
செய்யும் தொழில் தெய்வம்.அதற்கு உதவும் கருவிக்கு மரியாதை.இதைக் கருத்தில் கொண்டே சிற்பநூல் வெளிப்படுத்தும் ஆயுதங்களை அறிக.
 
வேல் [கற்கால மனிதனின் குத்தும் ஆயுதம்], வாள், கத்தி, வி அம்பு, பாத்ரம் - மனிதன் கண்டு பிடித்த முதல் மண் கலம், உடுக்கை - ஒலிக் கருவி, அக்னி - தீயின் பயன்பாட்டை அவன் அறிந்த காலம், மணி - தகவல் தொடர்புக் கருவி, யாழ், குழல் ஆகிய இசைக் கருவிகள் மிகத் தொன்மை மிக்க மனிதனின் இசைக்கலைக் கருவிகள், கோடரி - கற்கால மனிதனின் வெட்டும் ஆயுதம், கதைக்கும் முன் தண்டு - கெட்டியான தடி கொண்டல்லவா அதிகம் வேட்டையாடினான், உலக்கை, இடி - இயற்கை சக்தி, அங்குசம் - வலிய விலங்குகளை அடக்கும் ஆயுதம், பாசக்கயிறு - அவன் மிக கெட்டியான கொடிகள் மூலம் கட்டப் பழக ஆரம்பித்த காலம், திரிசூலம் - வேலின் பரிணாமம், தாமரை - இயற்கை சக்தியான தாவரங்கள், கொடி - குடித் தலைமையின் குறியீடு, சங்கு - நெய்தல் ‘னில மக்களின் ஒலிக்கருவி, சக்கரம் - மிக முக்கிய நாகரிகப் பரிமாணத்தின் குறியீடு, சக்கரத்தினை மனிதன் கண்டு பிடித்த பிறகே அவனது பண்பாடு வாழ்வியல் பரிணாமம் வேகமானது.
 
அதே போல் யானை, பசு, காளை, குதிரை, எருமை, நாய், மயில், கிளி, அன்னம், மான், காட்டுப்பன்றி, சுறா மீன், ஆமை , பாம்பு ஆகிய விலங்குகளை அவன் வணங்கவும் செய்தான், தன் தெய்வத்தின் வாஹனம் ஆக்கினான்.இவையெல்லாம் ஆதி மனிதனுடன் மிக நெருங்கிய உயிரினங்கள்.
 
தொன்மைச் சிற்பங்களில் மிக அதிகக் கைகளும் ஆயுதக் கருவிகளும் கொண்ட தெய்வ வடிவு கொற்றவை என்ற துர்கையே ஆகும்.
 
இதை அறிந்த நீங்கள், இப்போது சிற்பங்களை கவனியுங்கள், ரசியுங்கள்.

தொல்காப்பியமும் உயிர்களின் பரிணாமமும்...

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 1974
தொல்காப்பியமும் உயிர்களின் பரிணாமமும்...
 
மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் இதைப் படித்து உள்ளுணர்ந்தால் மட்டுமே மாணாக்கருக்கு அறிமுகம் செய்ய முடியும்.
 
நம் முன்னோர்கள் உயிரினங்களை எவ்வாறு பகுத்துப் பார்த்தனர் என்று தொல்காப்பிய இலக்கணம் நூல் மூலம் அறிகிறோம்.
 
இதை ஆறிவியலில் உயிரினங்களின் தோற்றம், பகுப்பு - classifications ஆகிய பாடங்களை அடுத்து இதைச் சொல்ல வேண்டும்.
 
இவற்றை ஐம்பூதங்களின் BMIAC உடன் இணைத்துக் காண்பதே மிக முக்கியம்.
 
இவற்றுள் அனைத்து உயிர்களும் விழிப்புணர்வு தன்மை கொண்டவை.
ஆனால் அவ்விழிப்புணர்வின் தன்மை மாறுபடுவதைக் கருத்தில் கொண்டே பகுப்பு மேற்கொள்ளப்பட்டதை அறிக.
அந்த விழிப்புண்ரவின் அடிப்படையில் தான் நீர் வாழ்வன முதல் மனிதன் வரை பரிணாமம் நிகழ்ந்தன.
மேலும் மனிதன் ஒன்று - ஆறு அறிவு உயிர்களுள் தன் தன்மை, குணம், பேச்சு, செயல் ஆகியவற்றால் என்று இருக்கிறான்.
 
உயிரினங்களின் அறிவை வைத்தே நம் தமிழர் உயிரினங்களைப் பகுத்தனர்.
 
ஓரறிவு உயிர்கள் - உடல் மட்டுமே கொண்டு அறியப்படும். [உடல் பற்றிய சதா எண்ணத்துடன் அதன் தேவைகளுக்கு மட்டும் முக்யத்துவம் தரும் மனிதன்]
 
இரண்டறிவு உயிர்கள் - உடலும் வாயும் கொண்டவை [உடலும், உணவுச் சுவைக்கும் பேச்சுக்கும்]
 
மூன்று அறிவு உயிர்கள் - உடல், வாய், மூக்கு கொண்டவை [உடல் சுகம், உணவு - பேச்சு, பல்வேறு ஆசைகள்]
 
நான்கறிவு உயிர்கள் - உடல், வாய், மூக்கு, கண்கள் கொண்டவை [உடல், உணவு - பேச்சு, வாசனைகள், பார்வையால் சுகித்து இன்பம் கொள்வது]
 
ஐந்தறிவு உயிர்கள் - உடல், வாய், மூக்கு, கண்கள், காதுகள் கொண்டவை [உடல், உணவு - பேச்சு, வாசனைகள், பார்வையால் சுகித்து இன்பம் கொள்வது, செவிப்புலன் சுகானுபவம் கொள்வது]
 
ஆறாம் அறிவு கொண்ட உயிர்கள் - உடல், வாய், மூக்கு, கண்கள், காதுகள், மனம் ஆகியன கொண்டன. [அனைத்துடனும் மனதின் போக்குக்கு அதீத இடம் தருதல்]
 
ஆனால் இவற்றைக் கொண்டு மனிதனைத் தரம்தாழ்த்துவது இல்லை.
ஆனால் மனிதனின் குணமும் வாக்கும் செயலும் தரம் தாழ்வது கண்டால் அவர்கள் கீழ்நிலை கதி கொண்டவராவார்.
 
பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் அனைத்தும் சதா இயற்கைக்கு உபகாரமாய், மற்ற ஜீவன்களுக்கு உபகாராமாய் இருக்கும் நிலையில் உயர்ந்தவையே, மனிதனுக்கும் அதே கதி.
 
உடல் - நிலம்
 
வாய் - சுவை ஆனது, நீரினால் விளையும் உணவுப் பொருளின் சுவையின்பம் காண்பதே, இது நீர் தத்துவம்.
 
மூக்கு - வாசனை - வாயு
 
கண்கள் - பார்வையால் தெள்ளிவது , வெளிச்சம், தீ தத்துவம்
 
காதுகள் - விழிப்புணர்வின் கேள்வி அறிவைக் கொள்வதால் ஆகாசம்
 
மனம் அறிவைக் கொண்டு மேலும் பரிணமித்து விழிப்புணர்வாகி அகண்ட ஆகாச தத்துவமாகி, தூய அன்பால், பக்தியால், சேவையுமாகி மனிதனை உயர்த்தும் கருவி என்பது முன்னோர் வாக்கு.
 
அதன் படியே பல உயிர்களும் அன்பால் சதா உபகாரமாய் இருப்பதைக் காண்க.
 
தொல்காப்பியர் வகுத்த பண்டைத் தமிழ் உயிரினப் பரிணாமம் வெறும் உடல் சார்ந்த அறிவியல் அல்ல, அது வாழ்வியல் நிலையுடன் இணைந்த கதியாகும் என்பதை உணர்த்துக.
 
குமரிக்கண்டத்தில் அரங்கேறிய தொல்காப்பிய ஆசான் தொல்காப்பியரின் அருளால், குமரி அம்மையின் அருளால் அணுவளவேனும் புரிதல் ஆகி எழுதப்பட்டது.

Vinayagar chathurthi - a view

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 2134
வினாயகர் சதுர்த்தி
 
பாரத தேசத்தின் முன்னாள் பயோடெக்னிக் படைப்பு தான் வினாயகர்.
 
உலகில் மனிதன் கண்ணுக்குத் தெரியும் மிகப் பெரிய விலங்கு, உயர் பரிணாம மனிதன் ஆகிய இரண்டும் இணைந்த கோலம்.
 
உலகின் மிகப் பெரிய உருவப் படைப்பம், மிக உயர்ந்த அறிவின் படைப்பும், மிகச் சிறிய எலி, பாம்பு ஆகியன பஞ்சபூதங்களில் கூட்டுப் படைப்பே என்று உணர்த்தும் கோலமே வினாயகர்.
 
நிலம், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐம்பூதங்களின் தொகுப்பே கண.
 
அதற்கு ஆதார சக்தியே கணபதி.
 
குறிப்பாக உயிர்கள் எடுத்துள்ள உடல்கள் ஐம்பூதங்களின் கூட்டுத்தொகுப்பே வினாயகரின் உருவகம்.
 
இந்த உடல் நன்றாக வாழ உணவு மிக முக்கியம்.அதனால் தான் அவரது பூஜையில் பலவகை இயற்கை உணவுகள் படையல் ஆகின்றன.
 
கம்பு, கேழ்வரகு, சோளம், பழங்கள், அன்னம், பயறுகள் என அனைத்து வகை உணவுகளும் படைக்கப் படும்.
 
யானையின் பலமும் மனித விவேகத்தின் பலமும் ஒருங்கிணைந்த வாழ்க்கை மனிதன் கொள்ள வேண்டும்.
 
மனதின் அகங்காரத்தை அடக்கும் அங்குசம், மனதைத் தரமான நெறியில் செலுத்த பாசக்கயிறு, சாதனைகள் செய்ய தியாகம் செய்தே ஆக வேண்டும் என்ற குறியீடான உடைந்த தந்தம், பூரண ஞானம் என்பதே பூரண இன்பம் என்று உணர்த்தும் பூரணக் கொழுக்கட்டை ஆகியவற்றின் ஒரு மொத்த வடிவாக வினாயகர் அமைகிறார்.
 
உடலால் வாழும் வாழ்க்கை மகிழ்வுற செல்வமும் அறிவும் தேவை.
 
அதைக் குறிக்கவே லக்ஷ்மியும் வாணியும் வினாயகரின் இருபுறமும் இருப்பதாகக் காட்டுகிறார்கள்.
 
பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் வாதாபியில் போர் செய்த போது, அக்கோட்டை வாயிலில் இருந்த வாதாபி கணபதியை பரஞ்சோதி திருச்செங்காட்டங்குடிக்குப் பெயர்த்து வந்து கணபதீச்சரம் போயில் அமைத்தார். [கி.பி 7]
 
வினாயகரின் பல்வேறு வடிவங்கள், தோற்றங்கள் ஆகியன ஐம்பூதங்களின் கூட்டால் ஏற்படும் பல்வேறு தோற்ற வடிவங்களையே உணர்த்தும்.

தொல்காப்பியம் காட்டும் தாவரவியல் குறிப்புகள்

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 2486

தொல்காப்பியம் காட்டும் தாவரவியல் குறிப்புகள்

வெளிப்புறத்தில் உறுதியாயும், உட்புறத்தே மென்மையுமாய் உள்ளது புல்.தென்னை, பனை, பாக்கு, மூங்கில் ஆகியன புல் வகையே.

தோடு - கிளையுடன் நெருங்கி அதை மூடிய நிலையில் உள்ள இலை

மடல் - பரந்த இலை - வாழை, தாழை மடல்

ஓலை - தென்னை, பனையின் இலைகள்

ஏடு - தென்னை, பனையின் ஓலைகள் காய்ந்தால் ஏடு

இதழ் - பூவின் இதழ்

பாளை - பூக்களுடன் மூடிய உறுதியான பட்டை - தென்னம் பாளை

ஈர்க்கு - ஈர்க்குமார் என்பதே விலக்குமாரின் சீமாரின் பெயர் - கொங்கு தேச்ததில் ஈக்குமார் என்பது வழக்கு

குலை - கனிகள் தொகுத்துக் கூட்டமாய் ஒரு சேரக் காய்த்து விளங்குவது - ஆகியன புல் வகைத் தாவரத்தின் உறுப்புகள்

தண்டினுள் மிக உறுதியான உடல் அமைப்பு கொண்ட தாவரமே மரமாகும்.

இலை

முறி - முள்

தளிர்

தோடு

சினை - இன்றைய கிளை

குழை

அரும்பு - மொட்டு

பூ

நனை ஆகியன மரத்தின் உறுப்புகள்

காய், பழம், தோல், செதிள்,  வீழ்

தொல்காப்பியம் காட்டும் நால்வகை மக்கள்

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 4213

தொல்காப்பியம் சிறப்புப் பாயிரம் - கி.மு.1500

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்நூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கரை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற் கரிதபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே.

ஆஹா பனம்பாரனார் கி.மு 1500ல் குமரிக் கண்டத்தில் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின்கண் தொல்காப்பியம் அரங்கேறிய காலத்தில் அந்நாளில் பாடிய முன்னுரை இன்று நமக்குக் கிட்டியுள்ளதற்குக் காலத்துக்கு நன்றி கூறுவோம்.

ஆம் தமிழில் மூத்த முழுமுதல் நூலாய்க் கிடைத்த நூல் தொல்காப்பியம் அல்லோ?

சரி இதில் தொல்காப்பியரின் உடன் மாணாக்கர், தமிழறிஞர் என்ன கூறுகிறார்?

வடக்கில் திருவேங்கட மலையும் தெற்கில் குமரியும் எல்லையாகக் கொண்டது தமிழ் பேசும் மூத்த குடிகள் வாழும் நல்ல உலகம்.

தமிழ் மக்களின் பேச்சு வழக்கு, செய்யுள் வழக்குக்கு ஏற்ற இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என்று வகுத்துக் கூற இந்நூல் வருகிறது.[பொருள் - உலகில் வேறு எம்மொழியிலும் இன்று வரையில்லை]

குறிப்பாகத் தொல்காப்பியர் தம் நூலில் முத்தமிழில் ஒன்றான நாடகம் [நிகழ்த்துக் கலை] - அன்றைய ஊடக சக்திகளில் ஒன்று] மிக முக்கிய இலக்கணம் [கட்டுக்கோப்பு] தருகிறார்.இதுவே தமிழரின் உயர் நாகரிகத்தின் சான்று எனலாம்.

தொல்காப்பியன் இதற்கு முன் உள்ள இலக்கண நூல்களில் சொல்லப்பட்ட முறையான இலக்கணத்தையும் முன்வைப்பார்.

தன் வலிமையால் பகை நாடுகளை வென்று ஆணை செலுத்து நிலம் தரு திருவிற் பாண்டியனின் அவையில்,நான்கு மறைகள் கற்ற உயர் ஆசானாகிய அதங்கோட்டு ஆசான் முன் தம் அறிவால் செய்யுள் வடிவில் தொல்காப்பியன் தருகிறான்.

யாவர்க்கும் ஐயம் ஏற்படாத வழியில் எழுத்து, சொல், பொருள் இலக்கணத்தை இவர் இயற்றினார்.

இவர் நம் நாட்டில் விளங்கும் மிகத் தொன்மை மிக்க ஐந்திரம் என்ற இலக்கண நூலில் மிக்க பயிற்சி கொண்டவர்.மேலும் தொல்காப்பியன் என்ற தன் பெயரை உலகில் நிலை நாட்டும் வண்ணம் மிக அருமையாய் இந்நூலை அளித்துள்ளார்.

இவண்

மனம்பாரனார்.

இன்று தமிழ் மொழியில் உள்ள மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம்.

அது ஓர் இலக்கண நூல்.

இதை எழுதியவர் தொல்காப்பியர்.

இது இயற்பெயர் அல்ல, புனைப்பெயர்.

இவர் குமரிக் கண்டத்தில் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் இதை அரங்கேற்றம் செய்தார்.

இவர் இதற்கு மு அகஸ்தியரால் முதல் சங்கத்தில் எழுதப்பட்ட இலக்கணமான அகத்தியத்தின் மறுபதிப்பு, revised version, editted version என்றும் கூறலாம்.

இவர் பாண்டியன் நிலம் தரு திருவிற் பாண்டியன் சபையில் அதங்கோட்டு ஆசான் என்ற மூத்த அறிஞர் முன் பனம்பாரனார் என்ற உயர் ஆசான் முன்னுரை வழங்கத் தொல்காப்பியத்தை அரங்கேற்றம் செய்தார்.

இவரது தொல்காப்பியம் பல ப்ரதிகள் எடுக்கப்பட்டுக் காப்பாற்றப் பட்டன.இல்லையே கபாடபுரத்தில் சுனாமி அழிவுக்குப் பின் கிடைத்திருக்காதல்லவா?

திருவிதாங்கோடே அன்றைய அதங்கோடு எனக் கொள்ளலாம்.

என்பனார் புலவர், என்ப, என்பார், வரையார் போன்ற சொற்கள் தொல்காப்பியத்தில் அதிகம் வருவதால், பழைய இலக்கண நூல்கள் இருந்த சான்று உள.அவைக் கடல்கோளால் அழிவுற்றன.

இலக்கணம் என்பது அவர் சமூஹத்தில் வாழ்வியலுக்கும் கூறிய இலக்கணம் ஆகும்.அதுவே பொருள் இலக்கணம்.இது உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை.எதைப் பாடுவது - அதாவது மக்களுக்கு ஊடகம் மூலம் கூறுவது என்ற உயர் பண்பாட்டு மொழி நெறியினைத் தொல்காப்பியம் கூறுகிறது.

இதை குமரிக்கண்டத் தமிழர் தம் குறு வரலாற்றுப் பதிவேடு என்றும் கூற முடியும்.

தமிழகம் ஐந்து நில வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சி - மலைப்பகுதி

முல்லை - வனப்பகுதி

மருதம் - விளைநிலங்கள்

நெய்தல் - கடல் பகுதி

பாலை - வீணாய் வரண்ட நிலப்பகுதி

இயற்கையின் அமைப்பிற்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.குறிப்பாய்த் தொழில் அமையும், ஒழுக்கம் அமையும் என்று தொல்காப்பியர் கூறுகிறார்.அதன் அடிப்படையில் இலக்கியத்தை அமைக்கக் கூறுகிறார்.

இயற்கை அமைப்புக்கு ஏற்ற உணவு வகைகள் மக்கள் உண்டனர்.

ஒவ்வொரு நில அமைப்புக்கும் மக்களுக்கு உரிய பெயர்கள் இருந்தன.

இயற்கையின் சூழலுக்கும் மனிதத் தேவைக்கும் ஏற்ற வகையில் ப்ரபஞ்ச  சக்தி பல்வேறு தெய்வங்களாக வழிபடப்பட்டன.

மிகப் பெரிய நகரங்களும், சிறிய ஊர்களும், கிராமங்களும் இருந்தன.

வலிமை மிக்கக் கோட்டைகள் இருந்தன.

பெரிய நகரங்கள் நீர் நிலைகளில், குறிப்பாக ஆற்றங்கரைகளில் அமைந்தன.

வசதி கொண்டவர்களும் , அரசியல் மக்களும் மிகப் பெரிய வீடுகளில் வாழ்வர்.

எளிய மக்கள் வட்டமான அல்லது நீள்சதுர சிறிய ஓட்டு, ஓலை வேந்த வீடுகளில் வாழ்வர்.

வீடுகளில் அலங்கார ரசனை மேலீட்டு இருந்தது.

அரசன் மக்களின் தலைவன்.ஆனால் அவன் புலவர்களின் வழி காட்டுதலில் வாழ்ந்தான்.அவனது அமைச்சரவை மிக முக்யத்துவம் கொண்டது.

வேற்று நாடுகளில் இருந்து தூதர்கள், வணிகர்கள் வந்தனர்.

கல்வி கற்ற மக்கள் கொண்ட சமூஹம் இருந்தது.

கலைகள் ஊக்குவிக்கப் பட்டன.

படை பலம் மிகக் கருத்துடன் கவனிக்கப் பட்டது.

வரி வசூலிக்கும் பழக்கம் இருந்தது.

திறைகள் வழங்கும் வழக்கமும் இருந்தது.

தமிழ்ச் சங்கம் மூலம் சமூஹத்துக்கு இலக்கியங்கள் படைக்கப் பட்டன.

சேர சோழ பாண்டியர் முப்பெரும் அரசர் குடிகள் எனப்பட்டனர்.

அவர்கள் நல் வகைப் படைகள் கையாண்டு தேசத்தைக் காத்தனர்.

குறுவாள், நெடுவாள்,ஈட்டி, வேல், வில் அம்பு ஆகியன பயன்படுத்தப் பட்டன.

செம்பு முதலில் பயன்படுத்தப் பட்டது, அதன் பின் இரும்பு உபயோகத்துக்கு வந்தது.

தேசத்து உரிய சின்னம், பூக்கள் இருந்தன.

போர்க்களம் செல்லும் வீரர்கள் உரிய பூக்களால் ஆன மாலைகள் சூடினர்.

போரிலும் முறையான இலக்கணம் கையாளப் பட்டது.

அனைத்து ஆண் மக்களும் தேசத்தைக் காக்கப் போர்க்களம் புக வேண்டும்.

தேசத்துக்காக வீர மரணம் எய்தியோர், ஊரைக் காக்க மரணம் பூண்டவர், கணவனுடன் உடன் கட்டை ஏறினோர் ஆகியவர்க்கு வீர நடுகல், சதிக்கல் நட்டு வழிபடும் மரபு இருந்துள்ளது.

இறந்தோரைத் தாழியுள் இட்டுப் புதைக்கும் வழக்கமும், எரிக்கும் வழக்கமும் இருந்தன.

இறந்தோர்க்கு ஆண்டு தோறும் நீர்க்கடன் செலுத்தும் மரபு இருந்தது.

விளக்கேற்றி வழிபடும் மரபு இருந்தது.

தமிழ் மொழி மிகத் தெளிவான, இலக்கணக் கட்டமைப்புடன் கையாளப்பட்டது.

மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள், வெங்கலப் பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன.

மக்கள் ஆடைகள், அணிகள் அணிவதில் ஆர்வம் கொண்டனர்.

இயற்கையான வண்ணக் கற்கள் பல அணிகளில் இருந்தன.

விவசாயமே அனைத்து நிலப்பகுதிகளிலும் மிக முக்கியத் தொழிலாகும்.

சாதி அமைப்பு இல்லை, ஆனால் மக்கள் தொழில் ரீதியாகக் குழுக்களாக வாழ்ந்தனர்.

பல்வேறு சிறுதானியங்கள், பயறுகள், அரிசி ஆகியன உணவாயின.

காலத்துக்கு ஏற்ற பழ, காய் வகைகளை மக்கள் உண்டனர்.

பசுக்கள், எருமைகள், எருதுகள், குதிரைகள், கழுதைகள், நாய்கள், யானைகள் மனிதனால் போக்குவரத்துக்கும் உழவுக்கு பயன்படுத்தப் பட்டன.

முழங்கால் வரை நீண்ட அங்கி போன்ற ஆடையை ஆண்கள் அணிந்தனர்.

அழகிய வேலைப்பாடு கொண்ட சேலைகளைப் பெண்கள் அணிந்தனர்.

பெண்கள் மேலாடை அணிந்தனர், பூக்களால் தழைகளால் ஆன ஆடைகள் இருந்தன.

பருத்தி, பட்டு, மஸ்லின் வகைகள் இருந்தன.

சந்தனம் பூசும் வழக்கம் அதிகம் இருந்தது.

கண்களில் மை தீட்டும் வழக்கம் பெண்களிடம் இருந்தது.

கைகளில், கால்களில், தோள்களில், மார்பில் சிவந்த சாந்தால் வரைந்து கொள்வர்.

ஆண்களும் பெண்களும் நீண்ட முடியில் பூக்கள் சூடினர்.மாலைகள் அணிந்தனர்.ஆண்கள் தாடி வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

ஊரார் முன்பு ஊர்த்தலைவர் கல்யாணம் செய்து வைத்துள்ளார்.

பனை ஓலைச் சுவடிகள் எழுதப் பயன்படுத்தப் பட்டன.

அரைக்கும் கல் பயன்பாட்டில் இருந்தது.

தொல்காப்பியம் - மூலம் அறியப்படும் பழங்காலத் தமிழக மக்களின் வாழ்க்கை

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 2604

Page 3 of 28

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
Support Joomla!
Contribute!
Joomla! Books
Books!
Joomla! Shop
Shop!

Powered by Joomla!®